Tuesday, November 3, 2015

தமிழர்களின் வீர விளையாட்டு ‘‘ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடரவேண்டும்’’

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் நடக்கிறது. இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார். கண்காட்சியையும் அவர் சுற்றிப் பார்த்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஜல்லிக்கட்டு, விலங்குகளை ரொம்ப தொந்தரவு செய்கிற விளையாட்டு என்று பலபேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸ்பெயினில் அது உண்மையாக இருக்கலாம். இத்தாலியிலும் உண்மையாக இருக்கலாம். என்ன நடக்கிறது என்று தெரியாமல் அங்கு விலங்குகள் மிரண்டு ஓடும். அதை நான் பார்த்து இருக்கிறேன். மிருகங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுப்பது இல்லை. அதை ஒரு விளையாட்டாகவும் அவர்கள் பார்ப்பது இல்லை. அங்கு நடப்பது போல் மாடுகள் மேல் ஆணியால் கீறி கொல்வது போன்றது அல்ல, ஜல்லிக்கட்டு. 

இது தமிழர்களின் வீர விளையாட்டு. ஜல்லிக்கட்டின் நற்றமிழ் பெயர் ஏறு தழுவுதல் என்பதாகும். மாடுகளை தழுவி பிடிக்க வேண்டும். கொம்பை பிடித்து முறுக்குவதோ மாட்டை கொலை செய்வதோ அல்ல. அமைதியான காலங்களில் இளைஞர்கள் மோதலில் ஈடுபடாமல் இருந்து பயந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களின் தசை நார்களை பதம் செய்வதற்காக மாடுகளைத்தழுவும் ஒரு வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. அது தொடரவேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற சிலரின் கோரிக்கையாக இருக்கிறது. அதனால் தான் இங்கு வந்தேன். ஜல்லிக்கட்டு என்பது புராதன விஷயம். அது மேற்கத்திய சிந்தனைகளால் அடிபட்டு போய்விடக்கூடாது. சுற்றுலாப்பயணிகளை கவருகின்ற விளையாட்டு என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் இந்த ஜல்லிக்கட்டு நமக்கு என்று இருந்துவிட்டுப் போகட்டும். கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டை தடுக்க வேண்டாம் என்று ஏறு தழுவும் தமிழனாக கேட்டுக்கொள்கிறேன். 

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...