தமிழை வளர்க்க, இவ்வுலகை மாற்றப் பிறந்தவன் நான்

உலகின் மூத்த குடியான தமிழ் குடி தோன்றிய இக்கிழமண்ணில் எத்தனையோ மகாகவிஞர்கள் , மாபெரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் , திரை ஜாம்பவான்கள் தோன்றி இருக்கிறார்கள் நம்முடன் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆம் காலச்சக்கரத்தின் பார்வையில், அப்படிப்பட்ட மொழி வளர்பாளர்களில் நாம் இனம் கண்டு கொண்டாடியவர்கள் மிக சிலரே. 
தாயிர்க்கோர் பழி நேர்ந்தால் அது மகர்கில்லையோ? அன்னை தமிழிர்க்கோர் பழி நேர்ந்தால் உமக்கில்லையோ? என்று டி.ஆர்.மகாலிங்கம் சிவனை பார்த்து பாடினார். ஆதி சிவதாயானவள், நம்மை ஈன்றெடுத்து வளர்த்தவள் தமிழ் அன்னை. இப்பெருமைக்குரிய மொழியில் பிறந்த நம்மிலா மொழி வளர்பாளர்களுக்கு பஞ்சம்!!! இல்லை இல்லவே இல்லை அப்படி இருக்கவும் முடியாது என்கிற உன் உள்ளக்குரல்கள் என் செவியை தட்டாமல் இல்லை.


நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாகவும் எம்தேன் தமிழியை சுவைத்து லயித்து மயங்கி வாழ்க்கையை மகிழ்ந்து வாழ்ந்‌து கொண்டு இருக்கும் மானுடா, இதோ உன் உள்ளக்குரல்களிற்கிணங்க என் மனகங்கையை இங்கே இவ்வலைதளத்தில் வெள்ளமாய் கட்டவிழ்க்கபோகிறேன், ஆம் தமிழை வளர்க்க பிறந்தவன் நான், இவ்வுலகை மாற்றப் பிறந்தவன் நான் என்றெல்லாம் சிலர்போல் எனக்கு புளுக மனமில்லாத காரணத்தினால், என்னைச் சுற்றியுள்ள சாமூகத்தில், நான் கடக்கும் பாதைகளில், என் செவியில் தட்டிய தகவல்களில், என் பார்வையில் நனைந்த காட்சிகளில் என்னை பாதித்த, சிந்திக்க வைத்த விடயங்களை இங்கே பதிவு செய்கிறேன். நான் விரும்பும் பொழுது என்னை நானே அசைபோட்டுக் கொள்வதற்கும் எனது காலப்பெட்டகத்தை திறந்து சுவைப்பதற்குமே அன்றி இந்த சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தி மாற்றத்தை காண்பதற்காக அல்ல.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...