Friday, January 8, 2016

பாம்பாட்டி சித்தர் கருத்துகள்


பாம்பாட்டி சித்தர் கருத்துகள் 

1. குருவே அனைத்திற்க்கும் மூல காரணம். மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றும் சத்குருவை (குருவுக்கெல்லாம் குருவாக அமைந்த இறைவன்) நோக்கி இருத்தல் வேண்டும் .கடவுள் யார் என விளக்கும் குருவை வணங்கி வாழ வேண்டும்.


2. மண்ணாசை, பெண்ணாசை,பொன்னாசை இல்லாமையே பூஜை செய்வதற்க்கு உரிய தகுதியாகும்.

3. சாதி, மதம், சமயங்கள், வேதம், ஆகமம், சத்திரம் முதலியவனவற்றில் உண்மை இல்லை. எனவே உன் கண்ணை நம்பி தியானம் செய். வைராக்கியமான  பக்தியுடன் இருப்பின் குண்டலினி எழும்ப, நாம் சிவஷக்தி தரிசனம் பெறலாம்.

4. செத்த பின்பு சிவலோகமும் கிடையாது , வைகுண்டமும் கிடையாது. உடம்பு அழியாமல் இருந்தாலன்றி சிவபதம் , வைகுண்ட பதவி அடைய முடியாது. எனவே உடலை பதமாக வளர்க்க முயல்க.

5. மூலாதாரத்தில் குண்டலினியை அடைக்க வேண்டும், அக்னிக் கோட்டையாகிய மணிபூரகம் மீதேறிப் போக விடுவோம். அச்செயல் நடக்க மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றையும் இறையாக கொடுப்போம்.குண்டலினி எருவிடு வாசலுக்கும் கருவிடு வாசலுக்கும் மத்தியில் உள்ள மூலதாரத்தில் ஒளிந்திருக்கும்.

6. சிவனே முதற் சித்தர். சிவனின் மாணாக்கர் எண்மர் .
  • சனகர்
  • சனந்தர்
  • சனாதனர்
  • சனத்குமாரர்
  • அகத்தியர் - சிவயோக மாமுனி
  • பாம்பாட்டி சித்தர்
  • வியாக்ரபாதர் - புளிப்பானிச் சித்தர்
  • திருமூலர்


7. இறைவனை உணர்ந்து பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ( கால் ) ஒடுங்கும்.
நாளுக்கு நம் இருதயம் 1,03,686 முறை துடிக்கிறது
நாளுக்கு நம் இரத்தம் 16,80,00,000 மைல்கள் ஓடுகிறது.தூங்கும் குண்டலினி இவ்வகை உடல் ஒடுக்கத்தால் விளித்து எழும். அதனால் சித்தி ஆகும்.

8. இறைவனை புருவ மத்தி என்ற மேடையில் வைத்து தரிசனம் செய்யும் முறை ஆத்மதரிசனம்  ஆகும். ஆகவே தான் தியானத்தை தவமுறை என்றுகூறுவர்.

9. "தாமரையிலை யினிலே தண்ணீர்தாங்காத்
தன்மை போல் "   -- Paambatti sidhar

தண்ணீரிலே இருந்தாலும் தாமரை இலையிலே தண்ணீர் தாங்கத் தன்மையை போல ஆசைகள் மிகுந்த இந்த உலக வாழ்க்கையிலே வாழ்ந்தும் கூட ஆசைகள் துறந்து , நிலையானது எது என்ற தத்துவம் கண்டு (இறைவன் ஒருவனே நிலையானவன் ) உய்ய வேண்டுகிறேன் எம்பிரானை. .

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...