Tuesday, July 29, 2014

அப்பா என்கிற மனிதன்

குழந்தை பிறந்தவுடன், அது ஆணோ பெண்ணோ எந்த தாய்க்கும் தந்தைக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு விசயமாகத்தான் இருக்கும். இதில் தாயின் நிலைபாட்டைப் பற்றி நான் பேசவில்லை. ஒரு தந்தையின் நிலைப்பாட்டை பார்க்கிறேன்.

பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருக்கவேனுமேன்பதே பெரும்பாலான அப்பாக்களின் விருப்பமாயிருக்கிறது. அப்படி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பெண் குழந்தை பிறந்தால், அளவில்லா மகிழ்ச்சிகொள்கிறான். தன குழந்தையை தேவதையாகப் பார்க்கிறான். அவளது இரண்டாம் வயதிலிருந்தே அவளை என்னை படிக்க வைப்பது, அவளின் திருமணத்தை எப்படி நடத்துவது எனப் பலதரப்பட்ட யோசனைகளை நெற்றி முடி நரைக்கும் வரை அவன் விடுவதில்லை.

சிறுவயதில் தன் மகளை குழந்தையாகப் பார்க்கிறான், பிறகு பதின்ம வயதில் மகளாக, பருவ வயதில் தோழியாக பாவிக்க முயல்கிறான், ஆனால் எப்போதும் அவனுக்குள் இருக்கும் அப்பா கதாப்பாத்திரம் அவனை ஒரு பொறுப்புள்ள தந்தையாகவே காட்டிக்கொள்ள முயல்கிறது.

எந்தெந்த இடத்திலெல்லாம் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைகிறதோ அல்லது அதன் தேவை இல்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவன் தன்னைத்தானே ஒருவித தாழ்வுமனப்பான்மைக்கு அடிபணியச் செய்கிறான். அதுவே அவனை மகளிடமிருந்து கொஞ்சமாய் தள்ளி நிற்கச் செய்கிறது. திருமண வயதில் அவளிடமிருந்து கொஞ்சமாய் விலகச்செய்யும் அது நாளைடைவில் பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது.

கணவன் வீட்டிலிருந்து வரும் மகளின் சுக துக்கங்களை தன் மனைவி மூலமாக மட்டுமே அறிந்துகொள்கிறான். எந்நேரமும் தன் மகளின் நல்வாழ்வையே சிந்தித்து வரும் அவன் தன் மனதில் தேக்கிவைத்த ஆசைகளை, தன் மகளிடம் பேச வேண்டுமென்று சேர்த்துவைத்த வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது, கூடவே அதன் கணமும். இறக்கும் தருவாயிலும் தன் மகளின் தலையில் கைவைத்து வாஞ்சையோடு தடவிக்கொடுப்பதொடு அவனின் எல்லாமே முடிந்துபோகிறது.

மகள்களும், தங்களது சிறுவயதில் தந்தையை ஒரு கதாநாயகனாக பார்க்கிறார்கள். பருவ வயதை அடைந்தவுடன், பெண்ணுக்கே உரிய சிலவிசயங்களை பகிரங்கமாக தந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாத அவள், தன் தாயை தோழியாக பாவிக்கிறாள். அங்கு தொடங்கும் அவர்களின் நெருக்கம் திருமணம், முதலிரவு, குழந்தை, குழந்தை வளர்ப்பு என ஒவ்வொரு நிலையிலும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தன் தந்தையோடு ஏற்ப்பட்ட இடைவெளிக்கு இன்னொரு சமாதானமும் அவள் யோசிப்பதே இல்லை. அதனால் ஏற்ப்படும் ஒரு தந்தையின் வலிக்கு மாற்றையும் அவளால் தேட முடிவதேயில்லை.

மகளின் திருமணத்திற்கு பிறகு அவளின் உறவுக்கொடி அவள், அவள் மகன், மகள், கணவன், மாமனார், மாமியார் என்று நீண்டுகொண்டே போகிறது. அண்ணனோ, தம்பியோ அப்பாவை தன்னோடு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் மனமிருந்தாலும் வழியில்லாமல் இருக்கும் அவள், என்றோ ஒருநாள் அப்பா இறந்து விட்டார் என்ற செய்திகேட்டு தூரத்திலிருந்து அழுதுகொண்டு, பிணத்தை எடுப்பதற்குள் வந்துசேர வேண்டுமென்பதிலேயே முடிந்துபோகிறது, ஒரு மகளின் விதி.
அதேபோல தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவும், அப்படியே. எண்ணற்ற சிக்கல்களையும், விசித்திர புரிதல்களுக்கும் உட்பட்டது. எல்லா அப்பவுமே இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான அப்பாக்களும், எல்லா மகன்களும் இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான மகன்களும் ஒருவித குறிப்பிட்ட மனநிலையிலேயே இருக்கின்றனர்.

தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை தன் மகனுக்கு அமைத்துக்கொடுக்கும், என்னால் மருத்துவராக முடியவில்லை, என் மகனை மருத்துவராக படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சராசரி தகப்பனாகி போகிறான். தன் மகனின் கனவுகள் தனது கனவுகளோடு ஒத்துபோகாதபோது ஏற்ப்படும் இடைவெளி பெரிதாகி தலைமுறை இடைவெளி என்னுமிடத்தில் போய் நிற்கிறது.

மகன் தனது கல்லூரியில், தனது தேவைகளுக்கான பணத்தை ஒருபோதும் அப்பாவிடம் கேட்ப்பதேயில்லை. அம்மாவின் மூலமாக தூதுவிடுகிறான். தன்னுடைய முதல மாத சம்பளத்தை தாயிடமே கொடுக்கிறான். தனக்கு பிடித்த அல்லது காதலிக்கிற பெண்ணை தாயிடமே அறிமுகம் செய்கிறான். இப்படி அவனது ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு சந்தோசங்களும் தாயின் மூலமாகவே தந்தையின் காதுகளுக்கு வந்து சேர்கிறது.

எந்த ஒரு தந்தையும் தனக்கு திருமணமாகும்வரை மட்டுமே அவனுக்காக வாழ முடிகிறது.பிறகு அவனது சுக துக்கங்கள் பெரும்பாலும் குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. முதலில் மனைவிக்காக, பிறகு குழந்தைகளுக்காக அவர்களின் கல்விக்காக, திருமணத்திற்காக என்று சகலத்தையும் ஒப்படைத்துவிட்டு எஞ்சிய காலங்களில் அன்பையும் அரவணைப்பையும் அனுசரணையான சொற்களையும் வேண்டி நிற்கும் அவனது கண்களில் காலத்தை விஞ்சிய ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. மெல்லிய நடுக்கத்தோடும் சன்னமான குரலின் முனகலோடும் இறந்துபோகிறது, அப்பாவின் கடைசி காலம்.

எனது வீட்டினருகே ஒரு வயதான தந்தை இருக்கிறார். அவருக்கு "ஏன்தான் இப்படி என்னோட உயிரை எடுக்குற?அதான் உன்னோட மவ வீடு இருக்குல்ல, அங்க போயிதொலைய வேண்டியதுதானே? இல்ல எங்கயாவது போயி தொலை... " இதுபோக இன்னும் கேவலமாக என்னென்னவோ சொல்லி திட்டித்தீர்க்கும் ஒரு மருமகள், இது எங்கேயோ,யார் வீட்டிலேயோ நடக்கிறது என்பதுபோல ஒரு முகபாவத்துடன் அவரது மகன். என்னுடைய அநேகமான காலைநேரம் இவர்களின் பெருத்த கூச்சல்களுக்கிடையேதான் விடிகிறது. சில நேரங்ககளில் அந்த தந்தையின் மகன் "அப்படியே ஒண்ணு விட்டேன்னா....... தெரியுமா? கிழட்டு......." என்று திட்டுவதை கேட்டிருக்கிறேன். என்ன தவறு செய்திருப்பார் அந்த அப்பா? எதற்காக இப்படி அவரை நோகடிக்கின்றனர்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.சரிபோகட்டும் என்ன செய்துவிட்டால்தான் என்ன?
சிறுவயது முதலே தாயுடன் ஏப்படும் நெருக்கம் கடைசி காலங்களிலும் தாயிற்கு சில சன்மானங்களை பெற்றுத்தந்து விடுகிறது.

ஆனால் தந்தை என்றுமே ஒரு பணம் காய்க்கும் மரம்தான், பணம் காய்க்கும்வரை அதுவும் செழிப்பாகத்தான் இருக்கும். காய்ப்பது குறையும்போது கிளைகளற்ற மொட்டை பனமரமாய் நின்று போகிறது.தந்தையின் உணர்வுகள் மிகவும் மெல்லியது. அதிர்ந்த கனமான வார்த்தைகளால் கூட கிழிந்து போகுமளவிற்கு மெல்லிய அந்த உணர்வுகளை புரிந்துகொள்வோம்.

Wednesday, July 16, 2014

ஒரு மகனுக்கு 56 வருடங்கள்

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4
வயதில் என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6
வயதில் என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10
வயதில் என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12
வயதில் ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14
வயதில் என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16
வயதில் அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18
வயதில் அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20
வயதில் அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25
வயதில் என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30
வயதில் என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40
வயதில் ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45
வயதில் குழந்தைகளைஅதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ

50
வயதில் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத்  தெரியவில்லை.

55
வயதில் என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60
வயதில் என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை! முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள்  பிடித்திருக்கிறது.

Friday, July 11, 2014

இறப்பிற்கு தயார்படுத்த சிறந்த வழி


என் தாயார் இறக்கும் தருவாயில் இருக்கிறார். அவரை இறப்பிற்கு தயார்படுத்த சிறந்த வழி என்ன?
சத்குரு
:உலகமெங்கும், மக்கள் அமைதியாக இறப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்; அவர்கள் அமைதியாகப் போய்விட நினைக்கிறார்கள். இப்படி ஒரு மனிதர் இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், அவர் அருகில் நீங்கள் ஒரு விளக்கேற்றி வைக்கலாம். அதில் நெய் இருந்தால் நல்லது அல்லது வெண்ணையைக் கூட பயன்படுத்தலாம்-அந்த விளக்கை தொடர்ந்து 24 மணி நேரமும் அந்த நபருக்குப் பக்கத்தில் எரிய வைக்கலாம். இது அவரைச் சுற்றி ஒரு சக்தி வளையத்தை உருவாக்கி, மரணத்தின் கொந்தளிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். இன்னொரு விஷயமும் செய்யலாம். அந்த நபர் விரும்பினால், நீங்கள் ஒரு மந்திர உட்சாடனையை மிகக் குறைவான ஒலியில் ஒலிக்கச் செய்யலாம். இதைப் போன்ற பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு ஒலி பின்னணியில் ஒலித்தால், கொந்தளிப்பான தன்மையை விலக்கிக்கொள்ள முடியும்.
14 நாட்கள் வரை:

இந்த ஏற்பாடுகளை ஒருவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் 14 நாட்கள் வரை செய்ய வேண்டும், ஏனென்றால் அவர் மருத்துவரீதியாக இறந்திருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை அவர் இறக்கவில்லை. அவர் முழுமையாக இறக்கவில்லை. மரணம் மெதுவாகத்தான் நிகழும். ஒரு மனிதர் இறந்தால், உடலில் உள்ள அவரது முடிகளும், நகங்களும் 11 நாட்கள் வரை வளரும்; பெரும்பாலும் 14 நாட்கள் வளரும் என்று முன்னரே நீங்கள் அறிந்திருக்கலாம். இது ஏனென்றால் மரணம் மெதுவாகத்தான் நடக்கிறது; அது முழுமையடையவில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும் இந்த செயல்முறை படிப்படியாக நடக்கிறது. நுரையீரல், இதயம், மூளை ஆகியவற்றின் செயல்பாடுகள் நின்றுவிட்டதால், மருத்துவரீதியாக அவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள், ஆனால் அப்படி இல்லை. அந்த மனிதரின் உடல் எரிக்கப்பட்டாலும், அவர் இன்னும் இறக்கவில்லை, ஏனென்றால், அவர் இன்னும் அடுத்த பயணத்தைத் துவங்கவில்லை.
அதனால்தான் ஒருவர் இறந்து 14 நாட்கள் வரை இந்தியாவில் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. துரதிருஷ்டவசமாக, இவற்றின் பின்னணியிலிருக்கும், புத்திக்கூர்மையும் சக்தியும் பெரும்பாலும் தொலைந்துவிட்டன. வெகு சிலர்தான் இவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்திருக்கிறார்கள். 
இறந்தவர்களின் உடைமைகள்:

எனவே ஒருவர் மரணமடைந்த பிறகு செய்யும் முதல் வேலை, அவர்கள் உடலுடன் மிக நெருக்கமாக இருந்தவற்றை, உதாரணத்துக்கு உள்ளாடைகளை எரித்துவிடுவார்கள். நகைகள், மற்ற துணிகள், மற்றவை எல்லாம் முதல் மூன்று நாட்களுக்குள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் - யாரோ ஒருவருக்கு மட்டும் அல்லாமல் பலருக்கு வினியோகிக்கப்பட்டுவிடும். யாராவது ஒருவருக்கு இறந்தவருடைய பொருட்களை மூட்டையாகக் கட்டிக் கொடுத்தால், அவர்கள் அங்குதான் செல்வார்கள், ஏனென்றால், அவர்கள் அந்தத் துணிகளில் இருக்கும் தங்கள் சொந்த உடலின் சக்தியின் மீது பற்று கொண்டிருப்பார்கள்.
இவையெல்லாம் மரணமடைந்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தையும், உறவினர்களையும் சமாதானப்படுத்துவதற்காவும் செய்யப்பட்டது. இதனால் அவர்கள், எல்லாம் முடிந்துவிட்டது என்று புரிந்து கொள்வார்கள். நீங்கள் அவருடன் எத்தனை நெருக்கமாக, பற்றுதலோடு இருந்தீர்கள் என்பது முக்கியமில்லை, ஆனால் அது நிகழ்ந்துவிட்டால், அவ்வளவுதான் விளையாட்டு முடிந்துவிட்டது என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.
அமைதியான சூழ்நிலை தேவை:

பொதுவாக, உலகெங்கிலும், கலாச்சார வித்தியாசமில்லாமல், "உங்கள் எதிரி இறந்து கொண்டிருந்தால் கூட, நீங்கள் அவருக்காக கொஞ்சம் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தவறான செயல்களை செய்யக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு எல்லா கலாச்சாரங்களிலும் இருக்கிறது, இல்லையா? ஒருவர் இறந்துவிட்டார், விளையாட்டும் முடிந்துவிட்டது. இப்போது பந்தை உதைப்பதில் பயனில்லை.
இதனால்தான், இறந்தவர்களை மரியாதையுடன் நடத்தாதபோது, உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வருத்தப்படுகிறது. அவர் எப்படி வாழ்ந்தார் என்பது முக்கியமில்லை இறப்பாவது நிச்சயமாக நன்றாக நடக்க வேண்டும். 

Thursday, July 10, 2014

டெய்லி 10 டு 12 லட்சம்

தொலைக்காட்சி தொடர் எல்லாமே தயாரிப்பாளருக்கும், டிவி சானலுக்கும் காசு கொட்டும் தொழிலாக மாறிவிட்டது . கலாச்சார சீரழிவு.... ரெண்டு பொண்டாட்டி போய் இப்பலாம் 3 பொண்டாட்டி இருக்காம் தொடர்களில்... பெண்களுக்கு ரெண்டு கணவன்கள் எல்லாம் சர்வ சாதாரணம் தொடர்களில்... நல்ல குடும்பத்தை கெடுப்பது, சொத்தை கொள்ளை அடிப்பது, அடுத்தவன் வாழ்க்கையில் அடிப்பது இவை எல்லாம் மட்டும்தான் தொடர்களில் இப்ப ஒளிபரப்பாகின்றன. நல்லது எதுவுமே இல்லை....சில டிவி சானல்களை மூடியே கூட விடலாம்... அந்த அளவுக்கு அவைகளில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்கள்... தொடர்கள்... முடியவே முடியாத நெடுந்தொடர்கள்... இதுல அதுக்கு நம்பர் ஒன் டிவி சேனல் என்ற பட்டம் வேற. ஏழை மக்களும் நடுத்தர மக்களும் விடும் அந்த கண்ணீர அவங்க அப்படியே சிந்தாமல் சிதறாமல் காசாக்கி விடுகிறார்கள்... டெய்லி 10 டு 12 லட்சம், தொடர் தயாரிப்பளருக்கு மிச்சம் ஆகிறதாம்... இதே மாதிரி டிவி கம்பெனிக்கு, விளம்பர காசு எத்தனை கோடி என்று தெரியவில்லை... உங்க கண்ணீரோட விலை என்ன என்று உங்களுக்கு தெரியுமா.யோசியுங்க மக்களே ..... உங்களுக்கு பொழுது போகவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டு கோடிகளை உங்களிடமிருந்து லபக்கி விடுகிறார்கள்...எந்த டிவியிலும் உருப்படியான, நல்ல, சமூகத்துக்கு தேவையான நிகழ்ச்சிகளே இல்லை. ஒரு சில சானல்கள் மட்டும் அழுது வடியும் தொடர்களை முற்றிலும் தவிர்த்து விட்டு நிகழ்ச்சிகளை தருகின்றன. ஆனால் மக்கள் அவற்றை பார்ப்பதில்லை.... மக்களே மாறுங்கள்....

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...