Tuesday, February 2, 2016

பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்கான பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள்.

Image hosted by Photobucket.com

தமிழகத்தின் இருண்ட காலமாக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் களப்பிரர்களின் ஆட்சிகாலத்தில் தமிழும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரட்டி விரட்டி கொல்லப்பட்டனர், மத சுதந்திரமில்லாத நிலை. இந்த இருண்ட ஆட்சியை விரட்டி பலம்மிக்க அரசமைத்தனர் பல்லவர்களும் பாண்டியர்களும்.

ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்தனர் ஆனால் இவர்கள் பெயர் தமிழக பேரரசர்களின் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டு மூவேந்தர் என சேர சோழ பாண்டியர்களின் பெயர்கள் மட்டுமே எப்போதும் கூறப்படுகின்றது.

சேர(ல)ர்கள் கேரளர்கள் ஆகி பின் மலையாளிகள் ஆன பின்பும் இன்னமும் விடாமல் தமிழகத்தின் மூவேந்தர்களின் பட்டியலில் முதல் வேந்தர்களாக கூறுகின்றோம்.

சோழ,பாண்டிய மன்னர்களின் காலங்களில் இருந்த கலைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் பல்லவர்களின் காலத்தில் கலை மிகவும் சிறந்தது விளங்கியது, யுவான் சுவாங் என்ற சீனப் பயணி பல்லவ ஆட்சிப் பற்றியும் கலைப் பற்றியும் மிகப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார், கம்போடியா,ஜாவா நாடுகளின் பல புகழ்பெற்ற கோவில்கள் பல்லவர்களின் கட்டிட கலையை சார்ந்தவைகள், உலக அதிசயமான ஆங்கர்-வாட்டை(கம்போடியா) உருவாக்கிய சூரியவர்மன் II மற்றும் ஜெயவர்மன் என்ற அரசர்கள் பல்லவர் வழி வந்தவர்கள் என சில குறிப்புகள் வரலாற்றாசிரியர்கள் சிலரால் தரப்படுகின்றன, வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.

மாமல்லபுரம், காஞ்சி கோவில்கள் எல்லாம் அவர்களின் கட்டிட கலைக்கான சான்றுகள்,
மாமல்லபுர குகைக் கோயில்கள் சிற்பங்கள் உலகின் தலை சிறந்த கட்டிட கலைக்கான சான்றுகள்.
















மாமல்லபுரம்கம்போடியா
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com


வீரத்திலும் யாருக்கும் குறைந்தவர்களில்லை, மொத்த தமிழினமும் களப்பிரர்களிடம் அடிமைபட்டிருந்த போது அதிலிருந்து மீட்டதில் பெரும் பங்கு பல்லவர்களுக்கு.
ஆறாம் நூற்றாண்டில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரசன் இலங்கையையும் மற்ற பிற தென் மாநில அரசுகளையும்( சோழர்களையும் சேர்த்து) வெற்றி கொண்டு பல்லவ பேரரசின் கீழ் கொண்டு வந்தார்,எல்லையிலிருந்த சாளுக்கியர்களுடன் நடந்த போர்களும் பாண்டியர்களுடன் நடந்த போர்களில் பெற்ற வெற்றியும் பல்லவர்களின் வீரத்தை பறைசாற்றுகின்றன, யாராலும் முறியடிக்கப்படமுடியாமலிருந்த இரண்டாம் புலிகேசி (ஹர்ஷவர்த்தனர் என்ற வட நாட்டு பேரரசரே இவரிடம் தோல்வியுற்றார்) நரசிம்ம வர்மருடனான வாதாபி போரில் உயிரையும் இழந்து வாதாபி நகரே தீக்கிரையானது.

கலைகளில் சிறந்து விளங்கினர், வீரத்தில் சிறந்து விளங்கினர், பின் ஏன் சேர சோழ பாண்டியர்களுக்கு தரப்பட்டுள்ள இடம் இவர்களுக்கில்லை?

சோழ பாண்டியர்களின் ஆட்சியில் சைவ மதத்தின் ஆதிக்கம் அதிகம், இந்த ஆட்சிகள் சைவ மதத்தின் ஆட்சியாகவே நடந்தது, ஆனால் உண்மையான மத சார்பற்ற ஆட்சி பல்லவர்களின் காலத்தில் தான், சைவம்,வைணவம் மட்டுமின்றி பௌத்த மதமும், ஜைன மதமும் சமமாக மதிக்கப்பட்டு நடத்தப்பட்டது, எல்லா மத்தினரின் வளர்ச்சிக்கும் அரசின் ஆதரவு கிடைத்தது, பல பௌத்த மடங்கள் காஞ்சியிலிருந்தன.

சமய சார்பற்ற கொள்கை கடைபிடித்த பல்லவர்களுக்கு ஏன் சேர சோழ பாண்டியர்களுக்கு தமிழக வரலாற்றில் தரப்பட்ட முக்கியதுவம் தரப்படவில்லை.

சேர சோழ பாண்டியர்களை மூவேந்தர்கள் என்று குறிப்பிடும் சொல்லாட்சி சென்ற நூற்றாண்டில்தான் அதிகளவில் புழக்கத்தில் வந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சென்ற நூற்றாண்டுவரையிலான தமிழ் நூல்களில் எந்த இடத்திலும் சேர சோழ பாண்டியர்களை மூவேந்தர்களாக குறிப்பிட்ட நூல்கள் எதுவுமில்லை. பின் எப்படி திடீரென சேர சோழ பாண்டியர்களுக்கு தரப்பட்ட உயரிய இடம் பல்லவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, இதற்கான காரணமென்ன?

சமகாலத்திலும் இதற்கு முந்தைய அரை நூற்றாண்டிலும் தமிழ் வேந்தர்களெனில் சேர சோழ பாண்டியர்கள் என்ற புகழ் பிரச்சாரம் நடத்தப்பட்டது, மக்களுக்கும் தமிழ் வேந்தர்களெனில் சேர சோழ பாண்டியர்கள் தான் முதலில் நினைவுக்க வருவர்,

இதற்கென்ன காரணம்,

நான் அந்த கால கட்டத்தை சேர்ந்தவனில்லை என்பதால் என் சிற்றறிவுக்கு இன்னமும் சரியான காரணம் புலப்படவில்லை, பல முறை வரலாற்று புத்தகங்களில் முயற்சித்து பார்த்தும் சரியான பதில் கிடைக்கப்படவில்லை.

ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் வழியாக கிடைத்த ஒரே ஒரு கருத்து, பல்லவர்கள் தமிழர்கள் அல்ல,

இவர்களுடைய பூர்வீகம் எது என்று பல விவாதங்கள் நடந்தன. ஆனால் இவர்கள் தமிழர்கள் என்ற முடிவுதான் பல ஆராய்ச்சியாளர்களால் பல ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆங்காங்கே சில வரலாற்று ஆசிரியர்கள் இந்த கருத்தை எதிர்த்தாலும். இவர்கள் தமிழர்களல்ல என்றும் வட நாட்டு பிராமணர்கள் என கூறும் சில வரலாற்று ஆசிரியர்களின் முக்கிய வாதம் பல்லவர்கள் அசுவமேதயாகம் செய்தனர் என்பதும் இவர்களின் சில செப்பேடுகள்,கல்வெட்டுகள் வட மொழியிலுள்ளன என்பது, இதை மற்ற சில வரலாற்று ஆசிரியர்கள் அசுவமேத யாகம் பிராமணர்கள் மட்டும் செய்வதல்ல பல சத்திரிய அரசர்களும் செய்தனர், இரண்டாவதாக பல்லவர்கள் தெலுங்கர் என்ற கருத்திற்கு ஆதாரமாக தெலுங்கிலும் வட மொழியிலும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் வெளியிட்டுள்ளது, இதற்கான காரணம் பல்லவர்கள் தெலுங்கு அரசின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள் அந்த கால கட்டத்தில் வட மொழியின் ஆதிக்கம் அரசுகளில் இருந்தது (ஆதாரமாக சேர சோழ பாண்டியர்களின் சில கல்வெட்டுகள் வட மொழி, தெலுங்கில் இருந்ததை காண்பிக்கின்றனர்) எனவே தான் தெலுங்கும் வட மொழியில் ஆட்சி மொழியில் கலந்திருந்தது அதுவும் கூட தொடக்கத்தில் மட்டுமே பிற்காலத்தில் முழுக்க முழுக்க தமிழே ஆட்சி மொழியாக இருந்தது, தற்போது ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்டாலும் இன்னமும் ஆங்கிலேயர்களின் சட்டத்தையும் மொழியையும் கடைபிடிக்கின்றோமே என்ற உதாரணத்துடன் பல்லவர்கள் தெலுங்கர்களோ, வட நாட்டு பிராமணர்களோ அல்ல என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், மேலும் பல்லவ பேரரசு வீழ்ந்த பின் அரையர்(சம்புவரையர்),வென்று மண் கொண்ட உடையார், காஞ்சிவரத்தான் என்ற பட்ட பெயர்களுடன் ஆங்காங்கே குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர்

12ம் நூற்றாண்டில் பல்லவர்களின் வழிவந்த செங்கண்ணன் என்ற அரைய அரசன் படைவீடு (தற்போது படவேடு என்றழைக்கப்படும் ஊர்) என்ற ஊரை தலைநகராகக் கொண்டு சுயாட்சி புரிந்தார், சாளுக்கிய நாட்டிற்கு தப்ப முயன்ற சோழ மன்னனை போரிட்டு சிறைபிடித்தார், அவரைப்பற்றிய பல பாடல்கள் அவர் பல்லவ வழி வந்ததாக கூறுகின்றது. இவரைப்பற்றி வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஆக சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பிய போதும் பல்லவர்கள் தமிழர்கள் என்பதை நம்புகின்றனர்.

காரணம்-1*
கடந்த அரை நூற்றாண்டு காலமாக வரலாறு, கதைகள் வழியாகத்தான் சமூகத்திற்கு சென்றடைந்தது, சில வரலாற்று புனைக்கதை எழுத்தாளர்கள் மிக அழகாக எழுதினர், அதில் முதன்மையானவர் கல்கி, பொன்னியின் செல்வன் நாவல் வழியாகத்தான் பலருக்கும் சோழர்கள் பற்றி ஒரு பெரிய தாக்கம் வந்தது. சிவகாமியின் சபதம் படித்துதான் நரசிம்ம வர்ம பல்லரும் நாகநந்தியும் புலிகேசியும் பெரிய தாக்கமமேற்படுத்தியது மக்களின் மனதில்.

பொன்னியின் செல்வனில் முக்கிய கதை மாந்தர்களாக அருள்மொழிவர்மன்(ராஜ ராஜ சோழன்), வந்தியத் தேவன்,குந்தவை, ஆதித்த கரிகாலன் மற்றும் பலர், இதில் குறிப்பிட்டவர்கள் வரலாற்றில் வாழ்ந்தவர்கள், கதை படிக்கும் போது அதை கதையாக படிக்காமல் வரலாற்று நிகழ்ச்சியாக படித்தனர் மக்கள், அதனால் சோழ அரசர்களின் மீது ஒரு பிடிப்பு வந்தது.


சிவகாமியின் சபதத்தில் முக்கிய கதை மாந்தர்களாக நரசிம்ம வர்மர், சிவகாமி(முழுக்க கற்பனை பாத்திரம்), நாக நந்தி மற்றும் பலர், பொன்னியின் செல்வன் படிக்கும்போது சோழ அரசர்கள் மீது படியும் ஒரு பிரமிப்பு சிவகாமியின் சபதத்தில் பல்லவர்களின் மேல் வருவதில்லை மேலும்
விஜயாலய சோழன், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன், மதுராந்த்தக சோழன் (இந்த பாத்திரம் முழுக்க முழுக்க கற்பனை, பெயரைத்தவிர, இதை கல்கி அவர்களே குறிப்பிட்டுள்ளார்) இவர்களின் வீரத்தை,புகழை புகழ்ந்து கூறப்பட்டதை போல சிம்ம வர்மன்,விஷ்ணு வர்மன், ஸ்கந்ட்த வர்மன், நந்தி வர்மன், புத்த வர்மன் பற்றியும், மகேந்திர வர்மர் மற்றும் முந்தைய பல்லவ வேந்தர்களின் புகழ் பாடப்படவில்லை, மேலும் கதையே பல்லவர்கள் அடைந்த தோல்விக்கு பழிவாங்குவதற்காக ஒன்பதாண்டுகள்** கடினப்பட்டு படை சேர்த்து சாளுக்கியர்களை வென்றது, இங்கே வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனு காட்டிய அளவிற்கான ஹீரோயிசம் இந்த கதையில் இல்லை, எனவே ஒரு விதமான ஆச்சரிய மனப்பான்மையோடு படிக்கவில்லை, விளைவு இதன் எண்ணம் பல்லவர்களைப் பற்றிய உண்மையான கருத்துகளின் மீதும் இதே நிழல் படிந்தது.

காரணம்-2 ***
சோழர்களும் பாண்டியர்களும் பல இடங்களில் தேவர் என்ற பெயரில் விளிக்கப்படுகின்றனர், இதன் விளைவாக தமிழ் நாட்டில் தேவர்கள் என்ற பெரும் எண்ணிக்கையிலுள்ள சாதியினர் இவர்களை தன் மூதாதையர்கள் என்றெண்ணி பெருமை அடைந்தனர், அதன் பிறகு புகழ் பரப்பப்பட்டது.

வரலாற்று குறிப்புகள் சென்னை பல்கலை கழகத்தின் இளங்கலை, முதுகலை பட்டத்திற்கான தமிழக வரலாறு பாடத்திட்டத்திற்கான புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு என் நினைவிலிருந்ததை கொண்டு எழுதப்பட்டது, புத்தக ஆசிரியரின் பெயர், பதிப்பகம், பக்க குறிப்புகள் நினைவிலில்லை, பிறகு அந்த புத்தகங்களை பார்த்து குறிப்பு தருகின்றேன்.

* - கல்கியின் மீதான விமர்சனமாக வைக்கவில்லை, என் பார்வை, புரிதலாகத்தான் இதை வைக்கின்றேன்.

** - சரியான வருட கணக்கு தெரியவில்லை

*** - எந்த சாதியையும் விமர்சித்து எழுதவில்லை, என் சந்தேகமே இது, இல்லை என்பதற்கான சரியான விளக்கமோ ஆதாரங்களோ தரப்பட்டால் என் புரிதலை மாற்றிக் கொள்கின்றேன்.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...