Tuesday, February 2, 2016

துரியோதணன்-கர்ணன் நட்பு

எடுக்கவா? கோர்க்கவா? துரியோதணன்-கர்ணன் நட்பு

நட்புக்கு ஒரு வசதி உண்டு, உறவுகளை போல அல்ல அது, அடித்தாலும் பிடித்தாலும் சாகும் வரை உறவு என்பது மாறாது ஆனால் நட்பு என்பது எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட்டுவிடலாம். அவ்வளவு பலவீனமானது தான் நட்பு. ஆனால் அந்த நட்பு என்பது நம்பிக்கை என்ற பலமான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அந்த நட்பு உறவுகளையும் விட பலமான வலிமையான உறவாகிறது.

துரியோதனன் கர்ணன் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம், அவை தம் குடும்பத்து பெண்கள் மற்றும் சாவு. துரியோதணனின் மனைவிக்கும் கர்ணனுக்கும் இருந்த தோழமையை துரியோதணன் நம்பி தனது வீட்டு பெண்டிர்களை நம்பி கர்ணனுடன் பழக அனுமதித்தது.

ஒரு முறை கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தான், அப்போது துரியோதனனின் மனைவி தோற்றுப்போனதால் ஆட்டத்தை களைத்துவிட்டு எழுந்து ஓட அப்போது கர்ணன் அவரை பிடித்து இழுக்க முயன்ற போது அவரின் முத்தாரம் அறுந்து விழுந்தது, அப்போது திடீரென உள்ளே நுழைந்த துரியோதணன் கர்ணனிடம் கேட்டான் எடுக்கவா? கோர்க்கவா? என்று. அறுந்துவிழுந்த மணிமுத்தை நீ எடுக்க நான் கோக்கவா? அல்லது நான் எடுக்க நீ கோர்க்கிறியா என்றான். அது தான் துரியோதணன் கர்ணன் மீது வைத்திருந்த நம்பிக்கை.

இரண்டாவது துரியோதணனுடன் சென்றால் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும் கர்ணன் தொடர்ந்து துரியோதணனுடனே இருந்து உயிர்விட்டது. துரியோதணனுடன் இருந்தால் மரணமும் நிச்சயமும் சொர்க்கமும் கிடையாது என்று அறிந்தே பலரும் யுத்தத்திற்கு முன்பே வெளியேறியானர்கள், சில பெரியவர்கள் போர் செய்யாமல் வில்லை முறித்து போட்டுவிட்டு ஒதுங்கினார்கள், ஆனால் கர்ணன் மட்டுமே கடைசி வரை இருந்தான். இத்தனைக்கும் கர்ணனின் தாய் குந்தி தேவி உட்பட பலரும் கர்ணனிடம் துரியோதணனை விட்டு விலக கோரினார்கள், அவனுடன் இருந்தால் சாவு நிச்சயம் என்று சொல்லியும் துரியோதணனை விட்டு கர்ணன் விலகவில்லை.

எனவே தான் துரியோதணன் கர்ணன் நட்பு வேறெந்த நட்பையும் விட சிறந்ததாக உள்ளது. இப்போது சுப்பிரமணியபுரம் காலம் பாருங்க, குத்தனவன் நண்பனா இருந்தா சத்தம் கூட போடக்கூடாது என்று வசனம் பேசுகிறோம்.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...