Tuesday, February 2, 2016

கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

இப்பூலலகில் விநாயகபெருமான்எழுந்தருளி  அருள்பாலிக்கும் ஆலயங்கள் எத்தனை எத்தனையோ அவை ஒவ்வொன்றும் தோன்ற ஒரு வரலாறு நிச்சயம் இருக்கும். இவ்வகையில்  கடற்பயணத்தால் எழுந்த வீரமுனை சிந்தாதிரை பிள்ளையார் õலயம் எழுந்த  வரலாற்றை அறிய வேண்டுமானால், நாம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிக்கு செல்ல வேண்டும்.



கி.பி.759 ஆம் ஆண்டில் உக்கிரசிங்கன் என்ற மன்னன் வடஇலங்கையில் பெரிதும் வலிமையுடன் விளங்கிய நாகப்பேரரசை வீழ்த்தி, தற்காலத்தில் கந்தரோடை எனப்படதும் அக்காலத்தில் கதிரைமலை எனப்பட்டதுமான நகரை  தலைநகராக கொண்டு ஆளத் தொடங்கினான். சில காலத்திற்கு பின் அவன், தற்கால யாழ்ப்பாணம் வல்லிபுரம் என்று அழைக்கப்பட்டதும், அக்காலத்தில் சிங்கை எனப்பட்டதுமான சிங்கை நகரை தன் தலைநகராக மாற்றிக்கொண்டான். இவனது மனைவி மாருதப்புரவீகவல்லி சோழ இளவரசி. இத்தம்பதியருக்கு வாலசிங்கன் என்ற மகனும், சண்பகவல்லி என்ற மகளும் பிறந்தனர். இளவரசன் வாலசிங்கன் அனைத்து கலைகளையும் நன்கு கற்று தேர்ந்ததுடன் நால்வகை வேதங்களையும் பயின்றவன். மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவன். எனவே மக்கள் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்றவனாக விளங்கினான்.
உக்கிரசிங்கன் மறைவிற்கு பின் வாலசிங்கன் மன்னன் ஆனான். அக்காலத்தில் பழையாறையை தலைநகரமாக கொண்டு அரசாண்ட குமாரங்குச சோழனுக்கு நற்குணமும் தெய்வ பக்தியும் நிறைந்த சீர்பாததேவி என்ற மகள் இருந்தாள். நற்குணவதியான இவளின் சிறப்பை பலர் வாயிலாக கேட்டும், தன்  தந்தையை போலவே சோழநாட்டிலிருந்து பெண் எடுக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தாலும் தன் அமைச்சர்கள் சிலரை பழையாறைக்கு அனுப்பி சோழனிடம் பெண் கேட்க குமாரங்குசனும் இசைவு தெரிவிக்க வாலசிங்கன் சீர்பாததேவி திருமணம் பழையாறையில் மிகுந்த சிறப்புடன் நடந்தேறியது. திருமணம் முடிந்த பின் சிங்கை மன்னன் தன் மனைவியுடன் இலங்கை திரும்ப எண்ணிய பொழுது சோழ மன்னன் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் நால்வகை வருணத்தை சேர்ந்த சிலரையும் அவரவர் குடும்ப சகிதம் சீர்பாத தேவிக்கு துணையாக அனுப்பி வைத்தான். அரச குடும்பத்தினர் பயணம் மேற்கொண்ட கப்பல்  இலங்கையின் கிழக்கு கரையோரமாக சென்ற போது திரிகோணமலை திருகோணேசுவர பெருமான் ஆலயத்தின் அருகில் நகராமல் நின்று விட்டது. அப்போது அரச குலத்தை சேர்ந்த சிந்தன் என்பவன் கடலில் மூழ்கி ஆராய, விநாயக பெருமான் நிக்ரகம் ஒன்றால் கப்பல் பயணம் தடைப்பட்டதை அறிந்தான்.

அரச கட்டளைப்படி அந்த விக்ரகத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்து கப்பலில் சேர்த்தான். கம்பீரமான தோற்றமும், மிகுந்த எழிலும் கொண்ட அந்த விநாயக பெருமானை வணஙöகிய வாலசிங்கனும், சீர்பாததேவியும், ஐயனே மீண்டும் இக்கப்பல் தங்கு தடையின்றி சென்று எங்கு கரை சேருகிறதோ அங்கு உனக்கு ஓர் ஆலயத்தை கட்டுகிறோம் என்று பயபக்தியுடன்  பிரார்த்தனை செய்து கொண்டனர்.  விநாயக பெருமான் திருமேனியுடன் மீண்டும் பயணத்தை  தொடங்கிய கப்பல், தென்திசை நோக்கி சென்று மட்டகளப்பு பகுதியில் அக்காலத்தில் கோட்டைமடு என்று அழைக்க பட்ட வீரமுனை கரையில் தரை தட்டி நின்றது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கரை சேர்ந்து அங்கேயே தங்கி விநாயகருக்கு ஆலயம் அமைக்க  தொடங்கினர். அக்காலத்தில் வீரமுனையில் போதிய மக்கள் தொகை இல்லாத நிலையிலும்  பிற இடங்களிலிருந்து மக்களை தருவித்து ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. சிந்தாதிரை என்பதற்கு நல்ல பயணம் என்று பொருள். வாலசிங்கனும், சீர்பாததேவியும் மேற்கொண்ட நல்ல பயணத்தால்  எழுந்த ஆலயம் சிந்தாதிரிப்பிள்ளையார் ஆலயம் என்ற பெயரை பெற்றது. சிலரோ இதனை சிந்து யாத்திரை பிள்ளையார் ஆலயம் என்று அழைப்பர்.  இதன் பொருள் கடல் பயணத்தில் கண்டெடுத்த பிள்ளையார் என்பதாகும்.
வீரமுனை கிராமமும் ஆலயமும் 1954, 1960, 1990 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களாலும், வன்முறையாலும் நிர்மூலம் ஆக்கப்பட்டது என்றாலும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. 
இலங்கையின் மட்டக்களப்பிற்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வீரமுனை என்ற கிராமத்தில் சிந்தாதிரை பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...