Tuesday, July 8, 2014

உயிர்த்துடிப்பு





அந்த ஆஸ்ரமத்தில் பசுக்களின் கழுத்தில் கட்டியிருக்கும் கயிறு ஏற்கனவே அவிழ்க்கப்பட்டிருந்தன;ஆனால்,பசுக்கள் நகரமறுத்தன;அவைகள் திறந்து விடப்பட்ட நிலையில் அவைகள் அசையாமல் தொழுவத்திலேயே நின்று கொண்டிருந்தன;

குரு தனது சீடனிடம், நீ கயிறுகளை அவிழ்த்து விடுவது போல அவிழ்த்துவிடு;மாடுகள் நகரும்: என்றார்.அவ்விதமே சீடன் செய்ய,மாடுகள் மேய்ச்சலுக்குக் கிளம்பிச் சென்றன.

குரு சீடனிடம், மாடுகள் தாங்கள் கட்டப்பட்டிருப்பதாக நம்பியிருந்தன;அந்த நம்பிக்கையை இப்படிப்பட்ட நூதனமான மற்றொரு நம்பிக்கையைக் கொண்டுதான் சரி செய்ய முடியும்.நம்முடைய அனுபவம் இவ்விதத்தில்தான் இருந்துவருகிறது.ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு மனிதனுக்கு அவனுடைய அறிவு ஒன்றினால் தான் எல்லா காரியங்களும் நடத்தப்படுகின்றன.ஆனால் அந்த அறிவு இடையில் நின்று போகாமல் தொடர்ந்து இயங்கச் செய்யும் சக்தி நம்பிக்கையால் மட்டுமே கிடைக்கிறது

எனவே,கடும் கஷ்டத்தில் இருப்பவர்கள் பின்வரும் வாசகத்தை மறக்காதீர்கள்:

விடா முயற்சிகள் என்றும் தோற்றதில்லை;
வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை;

உயிர்த்துடிப்புடன் வாழ வைக்கும் நம்பிக்கை உணர்வு!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...