Tuesday, July 8, 2014

மரணம், மறுபிறவி










பத்மபுராணம் பூமியில் வாழும் 84,00,000 உயிரினங்களைப் பற்றி விவரிக்கிறது.இதில் 4,00,000 இனங்கள் தான் உயர்ந்த பிறவிகளாக இறைவன் வகுத்திருக்கிறார்.தேவர்கள்,கந்தர்வர்கள்,எட்சர்கள்,தேவதைகள் இந்த உயர்ந்த இனங்களில் இருக்கின்றன;இதில் முதன்மையானதாக இருப்பது நாம் வாழ்ந்து வரும் மனிதப் பிறவி.பெறற்கரிய மானிடப் பிறவி என்று ஏராளமான தமிழ் நூல்கள் தெரிவிக்கக்காரணம் என்ன?


பூமியில் நாம் தொடர்ந்து செய்யும் நல்ல செயல்களுக்கு ஏற்ப வான் உலகங்களில் ஏதாவது ஒரு உலகில் குறிப்பிட்ட காலம் வரை சகல சுகபோகங்களை அனுபவித்துவிட்டு,மீண்டும் பூமியில் பிறப்பெடுக்கிறோம்;அவ்வாறு பிறப்பெடுக்கும் போது பூர்வபுண்ணியத்திற்கேற்ப உயர்ந்த,சகல செல்வாக்குடன் கூடிய மனித பிறப்பை எடுக்கிறோம்.

ஒருவேளை இதுபற்றி எதுவும் தெரியாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களை சித்திரவதை செய்தும்,மனம் நோகடித்தும்,எல்லோரின் வெறுப்பையும் சம்பாதித்து இறந்தால் பூமிக்குக் கீழே இருக்கும் நரக உலகங்களில் ஏதாவது ஒரு உலகிற்கு அனுப்பப் படுவோம்;அங்கே நாம் இந்த பூமியில் ஆடாத ஆட்டம் ஆடியதற்கு தகுந்தாற்போல நரக வேதனைகளை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியில் மிகவும் சாதாரண பிறவியாக பிறப்பெடுக்கிறோம்.ஒவ்வொரு ஆன்மாவும் உடலில் வசிப்பதற்கு ஏற்றாற்போல் ஒரு விதமான இன்பத்தை இயற்கை கொடுத்துவிடுகிறது.


இருப்பினும்,இறைவன் கருணை மிகுந்தவன்;ஏனெனில்,ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீகத்தின் மீதான ஒரு ஈர்ப்பு உருவாக்கிட பல    நூறு சந்தர்ப்பங்களை உருவாக்கிக்  கொண்டே தான் இருக்கிறான்;நாம் தான் அதை பெரும்பாலும் அலட்சியப்படுத்திவிடுகிறோம்.


இந்தப் பிறவி முழுவதும் நீரில் விளையாட வேண்டும் என்ற ஆசையில் உடலை விட்டால்(மரணிக்கும் நேரத்தில் இதை நினைத்தால்) ஒரு மீனின் உடலை இயற்கை வழங்குகிறது;எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பவனுக்கு கரடியின் உடலும்,வேகமாக ஓட நினைப்பவனுக்கு கங்காரு உடலும்,எந்த நேரமும் பெண்களின்  மோகத்தில் இருந்து உடலை விடுபவனுக்கு பெண்ணின் உடலும்,இனிப்பை அதிகம் உண்ண வேண்டும் என்ற ஆசையில் உடலை விடுபவன் மீண்டும் மனிதப்பிறவி எடுக்குமளவுக்கு புண்ணியம் இல்லாத பட்சத்தில் எறும்பாகப் பிறக்க இயற்கை வழி செய்துவிடுகிறது.


மாமிசம் உண்பதில் அதிக ஆர்வத்துடன் வாழ்ந்து இறப்பவன்,உடனே புலியின் உடல் எடுப்பதில்லை;(புலிப் பிறவி எடுப்பதில்லை)புலியின் உடலில் வசிப்பதற்குத் தேவையான மனப்பயிற்சியை நரக உலகத்தில் மேற்கொண்ட பிறகே புலியின் உடலுக்குள் சென்றடைகிறான்.எமதூதர்களின் நேரடிக் கண்காணிப்பில் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு,அதில் தேர்ச்சி பெற்ற பிறகே புலியின் உடலுக்குத் தகுதி பெறுகிறான்.கண்டதை  உண்பவன் பன்றியின் உடலுக்குத் தகுதி பெறுகிறான்.


வீடு அல்லது பந்தல் இல்லாத இடங்களில் உண்ணாமல் வெட்ட வெளியில் சாப்பிட்டவன் மனித சஞ்சாரம் இல்லாத காட்டில் ஒரு குரங்காகப் பிறப்பான்;அனைவரையும் கோபமூடன் ,மூர்க்கத்தனமாகப் பேசியவன் பூனையாகப் பிறப்பெடுப்பான்;செடி,கொடிகளை கொளுத்தியவன் மின்மினிப்பூச்சியாகப் பிறப்பெடுப்பான்.காரணம் இல்லாமல் அனனவரிடத்திலும் விரோதம் கொள்பவன் குருடனாகப் பிறப்பெடுப்பான்;புத்தகங்களைத் திருடியவன் பிறந்த கொஞ்ச காலத்திற்குள்ளாகவே கண்பார்வையை இழந்துவிடுவான்;பிராமணக் குடும்பத்தை துன்புறுத்தியவன்,தான் பெற்றெடுக்கும் பிள்ளைகளையெல்லாம் இழப்பான்; பசியோடு சோறு கேட்டவனுக்கு எதுவும் தராதவன் மக்களைப் பெறாத பாவியாக பிறப்பெடுப்பான்;ஆடைகளைத் திருடியவன் உடும்பு ஜென்மத்தை அடைவான்;பிறர் இறக்க விஷம் கொடுத்தவன் பாம்பாக பிறப்பெடுப்பான்;குருவின் மனைவியை அடைய வேண்டி இம்சைப்படுத்தியவன் ஓணானாக பிறப்பான்;குளம்,கிணறு போன்றவைகள் தூர்ந்து  போகக் காரணமாக இருந்தவன் மீனாகப் பிறப்பெடுப்பான்;வேதம் பயின்றவர்களுக்கு தோஷம் கற்பித்தவன் ஆமையாக பிறப்பான்;ஜோதிடத்தையும்,கடவுளையும் திட்டியவனும்,கேலி செய்தவனும்,ஒற்றுமையாக இருந்த தம்பதியை தனது தந்திரபுத்தியால் பிரித்தவனும் அலியாகப் பிறப்பான்;இப்படி யார் யார் எப்படி மறு ஜென்மம் எடுப்பார்கள் என்பதை கருடபுராணம் தெரிவிக்கிறது.பொதுவில் சொல்லமுடியாத தவறுகளைச் செய்தவர்கள் என்னென்ன பிறவி எடுப்பார்கள் ? என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறது.நீங்கள் இந்த தண்டனைப்பட்டியலை நம்பாவிட்டாலும் நேரடியாக உணர்ந்தப் பின்னர் நம்புவீர்கள்;


மரணபயத்தில் இருந்து முழுமையாக விடுபட விரும்புபவர்கள் ஆன்மீகத் தொண்டில் ஆழமாகச் செல்ல வேண்டும்;ஆன்மீகத் தொண்டில் ஈடுபடுவதையும்,அதன் முக்கியத்துவத்தையும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதை தினசரிக் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்;

ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நாளைக்கே இறந்துவிடுவேன் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்என்கிறார் சாணக்கியர்;இந்த மனப்பான்மை பாரத தேசத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தோன்றும்.வேறு எவருக்கும் இந்த பாக்கியம் கிட்டுவதில்லை;


ஆன்மீகநடவடிக்கையில் ஈடுபடுபவர்களை மரணம் தழுவியப் பிறகு ஆன்மீக உடலை அடைகிறார்கள்;அத்தகைய உடல் மாற்றம் தூயபக்தர்களுக்கு படுவேகமாக நடைபெறும்.ஸ்தூல உடலை பிரிந்து ஆத்மாவும்,சூட்சும உடலை விட்டு வெளியே செல்வது மரணம் என்று திருமந்திரம் தெரிவிக்கிறது;ஸ்தூல உடல்,சூட்சும உடல் ஆகிய இரண்டையும் பிரிந்து தனது இயற்கையான ஆன்மீக ரூபத்தை அடையும் போது சிவலோகம் என்ற முக்தி நிலையை அடைந்துவிட்டது என்று கூறலாம்;முக்தி பெற்றவர்கள் உடலை விட்டுப் பிரியும் போது அவர்கள் இயற்கையான சிவலோக நிலையை இயல்பாகவே பெறுவார்கள்;ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் விபத்தில் இறந்தாலும் சரி;இயற்கையாக இறந்தாலும் அது மங்களகரமானதாகவே இருக்கும்;


ஆதாரம்:மரணம்,மறுபிறவி.பக்கம் 28,29,30

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...