Tuesday, July 8, 2014

குழந்தைகளா, குரங்குகளா?

அடிப்படைக் கல்வி என்பது மூளையின் புலன் உணர்வு வளர்ச்சியுடன் தொடர்புடையது என்பதும்,தாய்மொழிக் கல்வியில் தான் மூளை வளர்ச்சி பெறும் என்பதும்,தாய்மொழிப்பண்பாட்டுடன் அவ்வளர்ச்சி தொடர்புடையது என்பதும்,அடிப்படைக் கல்வி தொடர்பான ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளன.பின்னர் பிற மொழி வழியில் கல்வியைத் தொடர்வது எளிதாகி,அதிக பலன் தரும்.
உலகிலேயே இந்த பலனை தமிழ்நாடு மட்டுமே இழந்து வருகிறது.


ஆய்வுகளின் அறிவுரை:
விளையாட்டுப் பள்ளி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று உலக ஆய்வுகள் எல்லாம் உணர்த்துகின்றன.

சான்றுகளாக:1. www.ccsenet.org/ass&Asian Social Science Vol.7, No.12,December 2011 & Primery School Pupils’ Perception of the Efficacy of Mother Tongue Education in lbaden Metropolis by Dr.David O.Fakeye;
2.The Finding of a comprehensive research review carried out for the World Bank;Dutcher,N.in collaboration with Tucker,G.R.(1997);
The Use of First and Second Languages in Education;A Review of Educational Experience;Washington D.C.,World Bank;
3.Education for All;Policy Lessons From High & Achieving Countries;UNICEF Staff Working Papers;Mehrotra,S.(1998);New York,Unicef;
4.Expanding Educational Opportunity in Linguistically Diverse Societies & Dutcher,N:Center for Applied Linguistics,Washington D.C.,(2001)
5.Education in a multilingual world & Published in 2003 by UNESCO
http://unesdoc.unesco.org/images/0015/001556/155642E.pdf


இது போல் எண்ணற்ற உலக ஆய்வுகள் அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிபடுத்தியுள்ளன.
ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் இயல்புக்கேற்ற வகையில் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்கவும் அடிப்படைக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்பது ஆய்வுகளின் அறிவுரையாகும்.


தமிழகத்தின் நிலை:
1970 களின் தொடக்கம் வரை,தமிழ் நாட்டில் மேலே சொன்ன ஆய்வுகளுக்கு ஏற்ப,உயர்நிலைப்பள்ளி வரை ஏறத்தாழ அனைத்து மாணவர்களும் (விதிவிலக்காக ஒரு சில ஆங்கில வழிப்பள்ளிகள்-ஆங்கிலோ இந்திய மற்றும் வட மாநிலக் குழந்தைகளுக்கானவை;)தமிழ் வழியில் படித்து,பின் கல்லூரிகளில் ஆங்கிலவழியில் படித்து,உலக அளவில் சாதனையாளர்கள் உருவானார்கள்.தமிழ்நாட்டில் ஆங்கில வழிப்பள்ளிகள் 1970களில் புற்றீசல் போல் தொடங்கப்பட்ட காலத்தில் ஆட்டு மந்தைகள் போல் ஏதோ நல்லவழி என்று நினைத்து அப்பள்ளிகளில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சேர்த்தார்கள்.உலக ஆய்வுகள் பற்றி தெரிந்து தாய்மொழி வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய படித்தவர்கள் மட்டுமின்றி, தமிழ்/திராவிட அறிஞர்கள் தலைவர்களும்,தமிழ்ப்பற்றாளர்களும் அந்த ஆட்டு மந்தை போக்கிலேயே தமது பிள்ளைகளையும் ஆங்கில வழியில் படிக்க வைத்தது பெரும் கொடுமையாகும்.


அந்த காலகட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால்,அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல,அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆங்கில வழி புற்றீசலை ஒழித்திருப்பார்.அந்த சமயத்தில் மொத்த மாணவர்களில் +2 தமிழ்வழியில் எத்தனை சதவீதமோ,அத்தனை சதவீதம் எம்.பி.பி.எஸ்., பி..,படிப்புகளில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறைகளில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தவில்லை;அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் செல்ல ஆயிரக்கணக்கான தமிழ்வழி அரசுப்பள்ளிகள் படிக்க ஆளின்றி மூடப்பட்டு வரும் சவாலை தமிழ்நாடு சந்திக்க நேர்ந்திருக்கிறது.அரசுப்பள்ளிகள் மூடப்படுவதைத் தவிர்க்க,அங்கு கூடுதலாக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு செய்துள்ள முடிவை தவிர்க்கவே முடியாத முடிவே! அதைவிட தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்வழி ஆதரவாளர்களின் இரட்டை வேடம் அம்முடிவினால் அம்பலம் ஆனது மிகப்பெரிய பலனாகும். இனி தமிழ்வழியின் நேர்மையான ஆதரவாளர்களின் குரலுக்கு பெற்றோர்கள் செவி மடுக்க வாய்ப்பு வந்துள்ளது.


குழந்தைகளா, குரங்குகளா?
தற்போது கர்பமாக இருக்கும்போதே, எம்.பி.பி.எஸ்.,பி..,கனவு காணும் தாய்,குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் முடியும்போதே விளையாட்டுப் பள்ளியில்(அதான் ப்ளே ஸ்கூல்) சேர்த்து,தமதுபிள்ளைகள் அப்பா,அம்மா வைத் தெரிந்து கொள்ளாமல் டாடி,மம்மி என்று அழைப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.பின் ஆங்கில நர்சரி பாடல்களை(அதன் பொருள்,பண்பாட்டுப் பின்னணி பற்றிய தெளிவின்றி0 பாடுவதைக் கேட்டு மகிழ்கிறார்கள்;தாய்மொழி,நமது பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களின் தொடர்பற்று, தமது இயல்புக்கும்,வாழும் மண்ணிற்கும்,சம்பந்தமற்ற திரிந்த மேற்கத்திய பண்பாடு ஒழுக்க வாழ்வியல் திணிக்கப்பட்டு,அக்குழந்தைகள் குரங்காட்டியிடம் அகப்பட்டுக் கொண்ட குரங்கைப் போல வளர்கிறார்கள்.நமது கனவுகளைக் குழந்தைகள் மீது திணித்து தாய்மார்கள் நம்மையுமறியாமல் குரங்காட்டிகளாக மாறும் போக்கும் கூடவே வளர்கிறது.


உடல்ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மகக்ளை நாம் அறிவோம்;ஆனால் தாய்மொழிக்கல்வியற்ற ஆங்கில வழிக்கல்வி மூலம் படைப்பாற்றல்/சுய உருவாக்கல்(Originally)/நல்லொழுக்க மதிப்பீடுகள் (values)ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1970களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையான கல்வி பயிலும் குழந்தைகள் மேல்நிலைக்கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப்பிராணிகளாகவோ (domesticated animals)அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs) வெளிப்படுகிறார்கள்.இரண்டு வகையினருமே படைப்பாற்றல்/சுய உருவாக்கல்/நல்லொழுக்க மதிப்பீடுகள் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களாகவே சமூகத்தில் வாலிபர்களாக வளர்கிறார்கள்.


ஆங்கில வழிக்கல்வி
ஆங்கில வழிக்கலிவியின் காரணமாக குழந்தைகள் 10 வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது.அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக்கூடியவற்றை விடவும் குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது. அதிலும் அவர்களின் இயல்புக்கேற்ற துறையை அடையாளம் கண்டு,அதற்கான திறமைகளை வளர்த்து சாதிப்பதும் தடைபடுகிறது.பெற்றோர்களின் கனவுகளுக்காக அவர்களின் வாழ்வு ஒரு வகையிலான மனித ரோபோக்களாக அமைந்துவிடுகிறது.இந்த போராட்டத்தில் தோல்வி யானவர்கள் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,பயங்கரவாதம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் என்பதை கடந்த 20 வருட மனோதத்துவ மற்றும் குற்றப்பின்னணிக்கான பாரத தேசியப் பண்பாட்டு ஆய்வு முகமை கண்டறிந்துள்ளது.


1970களுக்கு முன் தமிழ்நாடு முழுவதுமே பெரும்பாலான மாணவர்கள் உயர்நிலைக்கல்வி வரை தமிழ்வழியிலேயே படித்தார்கள்.ஆங்கிலத்தில் வலுவான இலக்கணத்துடன் மொழி அறிவும் பெற்றார்கள்.கலை,அறிவியல்,தொழில்நுட்பம்,மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரி படிப்புகள் முழுவதும் ஆங்கில வழியில் இருந்தும்,அவர்கள் அதிலும் நன்கு படித்தார்கள்.வெகுசில ஆங்கில வழிப்பள்ளிகளே இருந்தன;அதில் படித்த ஆங்கில வழி மாணவர்களை விட பெரும்பாலும் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் ஆங்கில வழியில் கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள்.1970களில் தான் இது மாறத் தொடங்கி,இப்போது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கூட அன்று தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கிருந்த ஆங்கில அறிவு இல்லாமல் உள்ளது.


இன்று ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி,எழுதி,பேராசிரியர்களாக,விஞ்ஞானிகளாக,மருத்துவர்களாக,பொறியாளர்களாக பணிபுரியும்/பணி ஓய்வு பெற்ற சுமார் 50 வயதுக்கும் மேலான அனைவருமே 11 வது வரை தமிழ்வழியில் படித்து,அதன் பின் பி.யு.சி.,முதல் ஆங்கில வழியில் படித்தவர்கள் தான்.
தமது பிள்ளைகள் சரியான புலன் உணர்வுகளுடன் கூடிய மூளை வளர்ச்சி பெற்று,அவர்களின் இயல்புகளுக்கேற்ற திறமைகளை வளர்த்து அவர்கள் நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்ற அக்கறையுள்ள பெற்றோர்கள் அடிப்படைக்கல்வியை தமிழ்வழியில் பத்தாம் வகுப்பு வரையிலாவது தரவேண்டும்;மாநகரங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் தமிழ் வழியில் படிக்க வைத்துவிட்டு,ஆறாம் ஏழாம் வகுப்புக்கு ஆங்கில வழியில் சேர்ப்பது வழக்கமாகி வருகிறது.அந்த ஓரிரு ஆண்டுகளிலேயே மீண்டும் தமிழ்வழியில் சேர்ப்பதும் சகஜமாகிவருகிறது.இது தவறு;பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் தமிழ்வழியிலேயே பயிலச் செய்வதே மிகவும் நன்று.இவ்வாறு செய்தாலே கல்லூரிக்கல்வியை/பாலிடெக்னிக் கல்வியை/.டி..கல்வியை/ என் ஜினியரிங் கல்வியை/கலை மற்றும் கணினி டிகிரிப் படிப்பை தரமான ஸ்போகன் இங்கிலீஷ் பயிற்சியின் மூலமாகவே சுலபமாக முடித்துவிட நமது பிள்ளைகளால் முடியும்.

ஓவர் ரிஸ்க்கால் ஒரு தலைமுறையைப் பாழாக்கிவிடாதீர்கள்;



அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...