Tuesday, July 8, 2014

வாய் பூட்டு

பொதுவாக சாதனை செய்தவர்களைப்பார்த்து, அவர்கள் அதிர்ஷ்டக் காரர்கள் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அவர்களுக்கு பிக்கல் பிடுங்கல் இல்லை அவர்களுக்கென்ன பணம் கொட்டிக் கிடக்கு என்று அவர்களின் சாதனைகளுக்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லி, தங்களுடைய இயலாமையின் வாய்க்கு தாங்களே பூட்டு போட்டுக் கொள்பவர்கள் இவ்வுலகில் ஏராளமானோர் உள்ளனர்.


வெற்றியாளர்களின் சாதனைகளுக்குப் பின்புலமாக இருந்திருக்கக் கூடிய பெருந்தோல்விகளையும் பொறுக்க முடியாத வலிகளையும் விடா முயற்சிகளையும் பிறர் அறிந்திருக்க வாய்ப்பில்லை;


இன்னும் ஒரு சிலரோ, எனக்கு வராது என்னால் முடியாது எனக்கு அதிர்ஷ்டம் இல்லை நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்ற தாழ்வு மனப்பான்மையிலேயே ஊறி வாழ்ந்து வருகிறார்கள்.இந்த தாழ்வு மனப்பான்மை வரக்காரணம்நமது முன்னோர்கள் கடந்த 20,000 ஆண்டுகளாக சாதித்திருக்கும் சாதனைகள் பாடத்திட்டத்தில் இல்லாமல் இருப்பதும்;பத்திரிகைகளில் பெரும்பாலும் வராமல் இருப்பதுமே! தவிர,பெற்றோர்கள் எப்போதும் நீயெல்லாம் உருப்பட மாட்டே;தண்டச் சோறு என்று அடிக்கடி திட்டி அவர்களின் சிறந்த ஆளுமைத் திறனைச் சிதைப்பதும்,திராவிடம் பேசும் அரசியல் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சிகளில் எப்படி பிறரின் தொழிலை/வேலையை/குடும்ப ஒற்றுமையைக் கெடுப்பது? எப்படி பிறரின் குறைகளை மட்டும் கண்டுபிடிப்பது? என்ற கொள்கையின் அடிப்படையில் தொடர்களை தினமும் ஒளிபரப்புவதுமே.தினசரி செய்தித்தாள்கள்,வார இதழ்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பதுமே!!!

ஒன்று தெரியுமா?

சாதனையாளர்கள் அனைவரும் சாதனையாளர்களாகப் பிறப்பதில்லை;அவர்களும் சாதாரணமானவர்களைப் போலவே தான் பிறக்கிறார்கள்.ஆனால்,அவர்கள் வளர்கின்ற போது, ஒரு காலகட்டத்தில் தங்கள் நிலை உணர்ந்து, அடிப்படையான தங்களின் குணநலன்களில் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டதோடு, வாழ்நாள் முழுவதும் தங்கள் பண்புகளை மேம்படுத்தி உயர்த்திக் கொள்ளத் தொடர்ச்சியாக உழைத்ததால் தான் உலகம் போற்றும் வெற்றியாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதே உண்மை.


ஆம்,பெரும்பாலான சாதனையாளர்கள் சிறுவயதில் படிப்பில் நாட்டமில்லாதவர்களாக,பயந்த சுபாவம் உள்ளவர்களாக,தன்னம்பிக்கையற்றவர்களாக,கோழைகளாக இருந்துள்ளார்கள்.உதாரணத்துக்கு,உலகமே ‘மகாத்மா’ என்று போற்றப்படும் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி சிறுவயதில் வெட்க சுபாவம் நிறைந்தவராகவும்,படிப்பில் சராசரி மாணவராகவும்,பிறரிடம் பேசுவதற்கே பயப்படும் கோழையாகவும் இருந்துள்ளார்.கல்லூரிக்காலத்திலும் எல்லாப் பாடங்களில் தோல்வியடைந்துள்ளார்.காந்திஜி தன் மாமாவின் வற்புறுத்தலால் லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர்(சட்டப்படிப்பு) படித்தார்;அவ்வாறு படித்த காலகட்டத்தில் வீட்டு நினைவுகளால் (Home Sick )இரவு நேரங்களில் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்திருக்கிறார்.பல நாட்களில் இரவில் தூங்கவேயில்லை;அடுத்த கப்பலில் புறப்பட்டு குஜராத்துக்கே திரும்பிவிடலாம் என்று பலமுறை முடிவெடுத்திருக்கிறார்.


இந்த குழப்பங்களுக்கு இடையே சட்டப்படிப்பு முடித்து இந்தியா திரும்பியவருக்கு தொடர்ச்சியாக தோல்விகளே உண்டாயின.லண்டனில் படித்த சட்டம் தவிர இந்தியாவில் சட்டம் பற்றி தெரிந்திருக்கவில்லை;முதல் வழக்கைக் கையாளும்போது கோர்ட்டில் வாதாட முடியாமல் கால்கள் நடுங்க ஆரம்பித்தன;இன்னும் சொல்லப் போனால் வாயில் இருந்து வார்த்தைகள் வராமல்,காற்று மட்டுமே வந்தது.பயம் உலுக்கி எடுக்க சக வழக்கறிஞரிடம் தனது முதல் வழக்கை ஒப்படைத்துவிட்டு கோர்ட்டைவிட்டு ஓடியே போனார்.
இந்நிலையில் காந்திக்கு தென்னாப்பிரிக்காவில் கணக்குப்பதிவேடுகளைப் பராமரிக்கின்ற ஒரு நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் வேலை கிடைத்தது;அதுவும் காந்திக்கு சவாலாகவே இருந்தது.ஏனெனில்,காந்திக்கு கணக்குப்பதிவு பற்றிய அடிப்படை அறிவு இல்லை;


இந்த காலகட்டத்தில் தான் காந்தி தனது நிலையைப் பற்றி உணர ஆரம்பித்தார்;தொடர்ச்சியான சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை என்பதையும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொண்டே இருந்தால் எந்த ஒரு வேலையிலும் நிலைத்திருக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டார்.சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவும்,மேம்படுத்திக்கொள்ளவும் திறமையை வளர்த்துக் கொள்ளவும் முயற்சி செய்வது ஒன்றுதான் வெற்றி பெற ஒரே வழி என்பதையும் அகத்தாய்வு மூலமாக உணர்ந்து கொண்டார்;கணக்குகளைக் கையாண்டார்;தன்னிடம் வருகின்ற வழக்குகளை தைரியமாக கையாளத் துவங்கினார்;தன் வழக்கின் இருதரப்பினரையும் கோர்ட்டுக்கு வெளியே பேசி அவர்களை சமாதானம் செய்து வைக்கும் திறமையையும் (Meditating )படிப்படியாகப் பெற்றார்.இதன் காரணமாக வழக்குகள் விரைவில் முடிவுக்கு வந்தன;இதனால் வெகுவிரைவிலேயே பிரபலம் அடைந்தார்;சமூகத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர் என்ற பெயரும் கிட்டியது.


பேசுவதற்கே கால்கள் நடுங்கிய காந்தி,ஒரு தலைசிறந்த வழக்கறிஞர் என்று பெயரெடுக்கக் காரணம்:மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்ததும்,எது தனது பலவீனம் என்பதை உணர்ந்து,திறமைகளை மேம்படுத்திக்கொண்டே இருந்ததுமே;இதனால் அவருக்கு வெற்றி கிடைத்தது.
இன்றும் இவரைப்போன்றே பல கோடி டீன் ஏஜ் மாணவ,மாணவிகளும்,பட்டதாரிகளும்,இளைஞர்களும்,இளம்பெண்களும் பேச,பழக கூச்சப்பட்டுக்கொண்டே வாழ்ந்து வருகிறார்கள்;அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும்;மீண்டு ஒவ்வொருவருமே சாதனையாளராக வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு ஆன்மீகக்கடலில் வெளியிடப்படுகிறது.

ஆதாரம்:புத்தம் புதிதாய் சிந்திப்போமே! பக்கம் 18,19 

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹா


அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...