என் தாயார் இறக்கும் தருவாயில் இருக்கிறார். அவரை இறப்பிற்கு தயார்படுத்த சிறந்த வழி என்ன?
சத்குரு:உலகமெங்கும், மக்கள் அமைதியாக இறப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்; அவர்கள் அமைதியாகப் போய்விட நினைக்கிறார்கள். இப்படி ஒரு மனிதர் இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், அவர் அருகில் நீங்கள் ஒரு விளக்கேற்றி வைக்கலாம். அதில் நெய் இருந்தால் நல்லது அல்லது வெண்ணையைக் கூட பயன்படுத்தலாம்-அந்த விளக்கை தொடர்ந்து 24 மணி நேரமும் அந்த நபருக்குப் பக்கத்தில் எரிய வைக்கலாம். இது அவரைச் சுற்றி ஒரு சக்தி வளையத்தை உருவாக்கி, மரணத்தின் கொந்தளிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். இன்னொரு விஷயமும் செய்யலாம். அந்த நபர் விரும்பினால், நீங்கள் ஒரு மந்திர உட்சாடனையை மிகக் குறைவான ஒலியில் ஒலிக்கச் செய்யலாம். இதைப் போன்ற பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு ஒலி பின்னணியில் ஒலித்தால், கொந்தளிப்பான தன்மையை விலக்கிக்கொள்ள முடியும்.

14 நாட்கள் வரை:
இந்த ஏற்பாடுகளை ஒருவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் 14 நாட்கள் வரை செய்ய வேண்டும், ஏனென்றால் அவர் மருத்துவரீதியாக இறந்திருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை அவர் இறக்கவில்லை. அவர் முழுமையாக இறக்கவில்லை. மரணம் மெதுவாகத்தான் நிகழும். ஒரு மனிதர் இறந்தால், உடலில் உள்ள அவரது முடிகளும், நகங்களும் 11 நாட்கள் வரை வளரும்; பெரும்பாலும் 14 நாட்கள் வளரும் என்று முன்னரே நீங்கள் அறிந்திருக்கலாம். இது ஏனென்றால் மரணம் மெதுவாகத்தான் நடக்கிறது; அது முழுமையடையவில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும் இந்த செயல்முறை படிப்படியாக நடக்கிறது. நுரையீரல், இதயம், மூளை ஆகியவற்றின் செயல்பாடுகள் நின்றுவிட்டதால், மருத்துவரீதியாக அவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள், ஆனால் அப்படி இல்லை. அந்த மனிதரின் உடல் எரிக்கப்பட்டாலும், அவர் இன்னும் இறக்கவில்லை, ஏனென்றால், அவர் இன்னும் அடுத்த பயணத்தைத் துவங்கவில்லை.
அதனால்தான் ஒருவர் இறந்து 14 நாட்கள் வரை இந்தியாவில் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. துரதிருஷ்டவசமாக, இவற்றின் பின்னணியிலிருக்கும், புத்திக்கூர்மையும் சக்தியும் பெரும்பாலும் தொலைந்துவிட்டன. வெகு சிலர்தான் இவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்திருக்கிறார்கள்.

இறந்தவர்களின் உடைமைகள்:
எனவே ஒருவர் மரணமடைந்த பிறகு செய்யும் முதல் வேலை, அவர்கள் உடலுடன் மிக நெருக்கமாக இருந்தவற்றை, உதாரணத்துக்கு உள்ளாடைகளை எரித்துவிடுவார்கள். நகைகள், மற்ற துணிகள், மற்றவை எல்லாம் முதல் மூன்று நாட்களுக்குள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் - யாரோ ஒருவருக்கு மட்டும் அல்லாமல் பலருக்கு வினியோகிக்கப்பட்டுவிடும். யாராவது ஒருவருக்கு இறந்தவருடைய பொருட்களை மூட்டையாகக் கட்டிக் கொடுத்தால், அவர்கள் அங்குதான் செல்வார்கள், ஏனென்றால், அவர்கள் அந்தத் துணிகளில் இருக்கும் தங்கள் சொந்த உடலின் சக்தியின் மீது பற்று கொண்டிருப்பார்கள்.
இவையெல்லாம் மரணமடைந்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தையும், உறவினர்களையும் சமாதானப்படுத்துவதற்காவும் செய்யப்பட்டது. இதனால் அவர்கள், எல்லாம் முடிந்துவிட்டது என்று புரிந்து கொள்வார்கள். நீங்கள் அவருடன் எத்தனை நெருக்கமாக, பற்றுதலோடு இருந்தீர்கள் என்பது முக்கியமில்லை, ஆனால் அது நிகழ்ந்துவிட்டால், அவ்வளவுதான் விளையாட்டு முடிந்துவிட்டது என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.

அமைதியான சூழ்நிலை தேவை:
பொதுவாக, உலகெங்கிலும், கலாச்சார வித்தியாசமில்லாமல், "உங்கள் எதிரி இறந்து கொண்டிருந்தால் கூட, நீங்கள் அவருக்காக கொஞ்சம் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தவறான செயல்களை செய்யக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு எல்லா கலாச்சாரங்களிலும் இருக்கிறது, இல்லையா? ஒருவர் இறந்துவிட்டார், விளையாட்டும் முடிந்துவிட்டது. இப்போது பந்தை உதைப்பதில் பயனில்லை.
இதனால்தான், இறந்தவர்களை மரியாதையுடன் நடத்தாதபோது, உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வருத்தப்படுகிறது. அவர் எப்படி வாழ்ந்தார் என்பது முக்கியமில்லை இறப்பாவது நிச்சயமாக நன்றாக நடக்க வேண்டும்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.