1970ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை பிஎஸ்எல்வி, எஸ்எல்வி-3 திட்டங்களில் பணியாற்றினார். இந்த திட்டங்கள் வெற்றிகரமாக முடிந்தன. நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான சிரிக்கும் புத்தர் திட்டத்துக்கு ராஜா ராமண்ணாவால் டிபிஆர்எல் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். 1970 எல்எல்வி ராக்கெட் மூலம் ரோகினி 1 ஏவப்பட்டது இஸ்ரோவின் சாதனையாகும். அமைச்சரவை ஒப்புதல் இல்லாவிட்டாலும், கலாம் தலைமையிலான விண்வெளி திட்டங்களுக்கு பிரதமர் இந்திரா காந்தி தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ரகசிய நிதி ஒதுக்கினார். அக்னி ஏவுகணை, பிருத்வி ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை உருவாக்கும் திட்டங்களில் கலாமின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.
கலாம் 1992ம் ஆண்டு ஜூலையில் இருந்து 1999 டிசம்பர் மாதம் பிரதமருடைய தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராக பணியாற்றினார். அப்போது, பொக்ரான்-2 அணு ஆயுத சோதனையில் தனது சிறந்த பங்களிப்பை அளித்தார். 1998ம் ஆண்டு, இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து குறைந்த செலவிலான கரோனரி ஸ்டென்ட்-ஐ கலாம் உருவாக்கினார். கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக 2012ம் ஆண்டில் இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கம்ப்யூட்டருக்கு ‘கலாம், ராஜூ டேப்லெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது.