மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயி ரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது வாயிரமானால்
ஆவியின் கூறு நூரயிரத்தொன்றே. --- திருமந்திரம்
திருமூலரின் கணக்குப்படி, ஜீவ அணுவின் அளவானது, மாட்டின் ஒரு மயிரை நூறு கூறிட்டு, பின்னர் அந்த ஒவ்வொரு கூறையும் ஆயிரம் கூறிட்டால் கிடைக்கும் ஒரு கூறின் அளவே அணுவின் அளவு. அதாவது ஜீவ அணுவினுடைய பரிமாணம் இலட்ச்சத்தில் ஒரு பங்கு.
அணுவின் கணக்கை இவ்வளவு துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும் ஞான அறிவு எவ்வளவு மகத்தானது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.