Friday, January 8, 2016

சிவவாக்கியர் - சாதியைப் பற்றிய கருத்து

இருக்குநாலு வேதமு மெழுத்தையற வோதிலும்
பெருக்கநீறு பூசிலும் பிதற்றினும் பிராணிரான் 
உருக்கிநெஞ்சை யுட்கலந்த உண்மைகூற வல்லீரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே.

இருக்கின்ற நாலு வேதங்களையும் பிழையில்லாமல் ஓதினாலும், திரு நீறு பூசினாலும், கடவுளைப் பாடுவதாலும் அவனை அடைய முடியாது. நீங்கள் உங்களுடைய மனத்தை நெருப்பிட்ட மெழுகுபோல் இளகச்செய்து, உங்களுள்ளே கலந்து இருக்கும் உண்மையை தெரிந்துகொள்ள முடியுமானால், கண்டிப்பாக சோதி சொருபனாய் விளங்கும் கடவுள் சிவனை அடையலாம்.

சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே.


சாதியாவது எது? குளம், குட்டை, ஆறு, ஊற்று, கடல் என வெவ்வேறாக தோற்றமளித்தாலும், அவை யாவும் நீராகிய ஒரு பொருளையே குறிக்கும். அது தவிர ஐம்புதங்களும் தங்களுக்குள் ஒரு தொடர்பு கொண்டு ஒரு பொருள் போல செயல்படும். தோடு, மூக்குத்தி, மாலை என வெவ்வேறாக தெரிந்தாலும் அவையாவும் பொன் ஆகும். ஆகையால் நான் இந்து, கிறிஸ்தவன், இஸ்லாம் என ஆணவம் கொண்டு சாதி பேதம் பேசித் திரியாதீர். உண்மையானதும், நிலையானதும் ஏதேன அறிந்து அதன் வசம் மனதைச் செலுத்துக.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...