மதுரை வாலை சாமி ஞான கும்மி
கள்ளுண்டு தள்ளுண்டு நில்லாதே பின்பு
கஞ்சா உறக்கமும் கொள்ளாதே
உள்ளுண்டு ஸோமக் கலையாதி பானத்தை
ஊட்டிக் கும்மி அடியுங்கடி.
கற்ப நிலையரிந் தெண்ணாமல் வெறிக்
கஞ்சா உண்டு விழிப்பார்கள்
அற்பர் குகைமலை சென்றாலும் வத்தை
அறிய லாகுமோ ஞானப்பெண்ணே.
Download this as pdf
பத்ரகிரியார்
கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமற்
பஞ்சாமிர் தத்தைப் பருகுவது மெக்காலம்.
சிவவாக்கியர்
காய காய முன்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதெங்கு மடிப்புமோசஞ்ச் செயபவர்
நேயமாய் கஞ்சா அடித்து நேரபினியைத் தின்பதால்
நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே.
Download this as pdf
அகப்பேய் சித்தர்
ஆர லைந்தாலும்
நீயலை யாதேயடி
ஊர லைந்தாலும்
ஒன்றையும் நாடாதே.