“இலிங்கநற்பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்கநற் கண்ட நிறையு மகாரம்
இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம்
இலிங்க மகாரநிறைவிந்து நாதமே!” - திருமூலர்
சதாசிவ லிங்கத்துக்குரிய பீடம் அல்லது அடிப்பாகம் ஓங்காரம் ஆகும். இலிங்கத்தின் கண்டம் மகாரம் ஆகும். இலிங்கத்தின் வட்டமாகிய பகுதி உகாரம் ஆகும். ஆகவே அருவுருவாக உள்ள இலிங்கத்தின் திருமேனி அகரம் உகர மகர விந்து நாதமாகிய பிரணவமாகும். ஆத்ம லிங்கமாவது ஆன்மாவே லிங்கம் ஆகும்.
லிங்கம் என்பது அணுதத்துவங்களின் வெளிப்பாடாய் உள்ள சிவன்- சக்தி சேர்க்கை ஆகும்.
சிவன்- அகாரம் ( எல்லாவற்றுக்கும் முதலாய் உள்ளது)
சக்தி- உகாரம் ( எல்லாம் உயிர் பெற்று நிற்க உதவுவது)
அகரம்- சிவம்- விந்து- 8
உகரம்- சக்தி- நாதம் -2
உண்மையில் ஓங்காரம் என்பது அகார, உகார மற்றும் மகாரங்களின் சேர்க்கை ஆகும்.
அ + உ +ம் = ஓம்
A+U+M= OM (AUM)
இந்த எழுத்துக்களை அர்த்தம் தெரிந்து மனதில் உச்சரித்தால் ஆகாய அணுக்களில் சூட்சம அசைவுகள் ஏற்படும். அதாவது விசையும் அதோடு கூடிய அதிர்வலையும் உண்டாகும். ( Force and vibration). நல்ல அதிர்வலையில் மனம் லயித்து இருக்கும் போது இந்த தூல உடலிலும் எல்லாம் அறியும் ஞானம் உண்டாகும். இதற்கு துணை செய்வது தான் தியானம் என்னும் சிவகலை.